IPL 2020: 'ஷாக்' ரிப்போர்ட்... 'இந்த' 4 டீமும்... 'பிளே ஆப்'புக்கு போறது கன்பார்மாம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 31, 2019 02:01 AM

கடந்த டிசம்பர் 19-ம் தேதி நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுகொண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளன. குறிப்பாக வெளிநாட்டு வீரர்களுக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்து இருக்கின்றன. இதனால் நடப்பு ஐபிஎல் செம விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

CSK, MI, RCB, KKR maybe these 4 teams reach Playoffs

இதற்கிடையில் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருப்பதாக டெல்லி அணியின் அதிகாரி ஒருவர் பேட்டியளித்து இருக்கிறார். முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என்றும், அதில் மும்பைஇந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதனால் ஐபிஎல் காய்ச்சல் இப்போதே ரசிகர்கள் மத்தியில் தொடங்கி விட்டது.

இந்தநிலையில் 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 4 அணிகள் பிளே ஆப்புக்கு செல்லும் என இப்போதே கருத்துக் கணிப்புகள் வெளியாக ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு அணியிலும் எடுக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்கள், கேப்டன்களின் செயல்பாடு போன்றவற்றின் அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது. அதை இங்கே பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். கடந்த ஆண்டு 1 ரன்னில் சென்னை அணி வெற்றிவாய்ப்பை இழந்தது. இதனால் இந்தமுறை பார்த்து, பார்த்து வீரர்களை சென்னை அணி தேர்வு செய்துள்ளது. அதோடு இந்த ஐபிஎல் போட்டியை பொறுத்தே தோனிக்கு உலகக்கோப்பை டி20 அணியில் இடம் கிடைக்கும் என்பதால், இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கண்டிப்பாக கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ்

இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா வழிநடத்தும் மும்பை அணியில் உலகின் அபாயகரமான பவுலர்கள் என புகழப்படும் பும்ரா, மலிங்கா இடம்பெற்று உள்ளனர். இதுதவிர ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா என மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களையும் அந்த அணி பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் என்பதால் இந்த முறையும் கோப்பையை கைப்பற்ற மும்பை அணி பெரிதாக போராடும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வழிநடத்தும் கொல்கத்தா அணி கடந்த முறை பிளே ஆப்புக்கு முன்னேறவில்லை. இதனால் ஏலத்தில் பாட் கம்மின்ஸ், இயான் மார்கன், டாம் பாண்டன், ராகுல் திரிபாதி என தலைசிறந்த வீரர்களை அந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதுதவிர கடந்த போட்டியில் அடித்து நொறுக்கிய ரஸல் அதோடு சுப்மன் கில், நிதிஷ் ராணா போன்ற வீரர்களும் அணியில் இருக்கின்றனர். உலகின் தலைசிறந்த வீரர்கள் பலரையும் ஏலத்தில் எடுத்துள்ளதால் இந்த முறை கொல்கத்தா பிளே ஆப்புக்குள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஏதேனும் மனக்குறை இருக்குமானால் அது ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்பதாகவே இருக்கலாம். அதனால் இந்தமுறை எப்படியும் கப்பை வெல்ல வேண்டும் என்பதையே அவர் லட்சியமாகக் கொண்டிருப்பார். இதற்காக கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வெளிநாட்டு வீரர்களை பலரையும் அந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளது. விராட் கோலி, டிவிலியர்ஸ் உடன் பார்த்திவ் படேல், ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல் ஆகியோரும் பேட்டிங்கில் கைகொடுத்தால் பெங்களூர் அணி அனைவருக்கும் கண்டிப்பாக டப் கொடுக்கும். பவுலிங்கிலும் டேல் ஸ்டெயின், இசுரு உடானா, உமேஷ் யாதவ், சிவம் துபே, நவ்தீப் சைனி என வலிமையான கூட்டணி இருப்பதால் இந்தமுறை பெங்களூர் அணி வீரர்கள் சற்று தைரியமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.