VIDEO: அவுட் என 'கைதூக்கி'... அம்பயர் 'செய்த' வேலை... அதிர்ச்சியடைந்த வீரர்... விழுந்து, விழுந்து 'சிரித்த' ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 30, 2019 05:20 PM

கிரிக்கெட் போட்டியின் நடுவே அவுட் என கைதூக்கி அம்பயர் செய்த வேலையால், ரசிகர்கள் விழுந்து, விழுந்து சிரித்து வருகின்றனர்.

Video: Umpire hilariously scratches nose after changing his mind

பிக்பாஷ் டி20 லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் இடையே டி20 போட்டி நடைபெற்றது. ரெனிகேட்ஸ் அணி சேஸிங் செய்தபோது  போட்டியின் 17-வது ஓவரை ரஷீத் கான் வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்து பேட்ஸ்மேன் வெப்ஸ்டரின் காலை உரசியது போல சென்றது.

இதனால் ரஷீத் கான் எல்.பி.டபிள்யூ கேட்டு முறையிட்டார். அம்பயர் கிரேக் டேவிட்சன் அவுட் கொடுப்பது போல கைதூக்க வெப்ஸ்டர் மைதானத்தை விட்டு வெளியேற ஆர்மபித்தார். ரஷீத் கானும் விக்கெட்டை கொண்டாட ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்துத்தான் அம்பயர் அவுட் கொடுக்காமல் மூக்கை தேய்த்தார் என்பது அனைவருக்கும் தெரியவந்தது.

பின்னர் ரஷீத் கானிடம் அம்பயர் அதுகுறித்து விளக்கம் அளித்தார். இறுதியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ரஷீத் கான் தேர்வு செய்யப்பட்டார்.