சென்னை அணி வீரர்களின் 'சம்பள' விவரம்... தோனிக்கு 'அடுத்த' எடத்துல... யாரு இருக்கான்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Dec 21, 2019 04:05 PM
கடந்த 19-ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி புதிதாக 4 வீரர்களை அணியில் எடுத்தது. தற்போது சென்னை அணியில் உள்ள மொத்த வீரர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது. இதில் உள்நாட்டு வீரர்கள் 16 பேரும், வெளிநாட்டு வீரர்கள் 8 பேரும் இடம்பெற்று உள்ளனர். சென்னை அணி கைவசம் தற்போது 15 லட்சம் மீதமுள்ளது.

இந்தநிலையில் சென்னை அணியில் உள்ள வீரர்கள் வாங்கும் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தோனிக்கு அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா இருக்கிறார். அவருக்கு அடுத்த இடங்களில் முறையே கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் சென்னை அணி பியூஷ் சாவ்லாவை 6.75 கோடிகளுக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணி வீரர்களின் சம்பள விவரம்:
1. எம்.எஸ்.தோனி - 15 கோடி
2. சுரேஷ் ரெய்னா - 11 கோடி
3. கேதார் ஜாதவ் - 7.8 கோடி
4. ரவீந்திர ஜடேஜா - 7 கோடி
5. பியூஷ் சாவ்லா - 6.75 கோடி
6. டுவைன் பிராவோ - 6.4 கோடி
7. சாம் கரண் - 5.5 கோடி
8. கரண் ஷர்மா - 5 கோடி
9. ஷேன் வாட்சன் - 4 கோடி
10. ஷர்துல் தாகூர் - 2.6 கோடி
11. அம்பாதி ராயுடு - 2.2 கோடி
12. ஹர்பஜன் சிங் - 2 கோடி
13. ஜோஷ் ஹேசில்வுட் - 2 கோடி
14. முரளி விஜய் - 2 கோடி
15. பாப் டூ பிளெசிஸ் - 1.6 கோடி
16. இம்ரான் தாஹிர் - 1 கோடி
17. தீபக் சாஹர் - 0.80 லட்சம்
18. லுங்கி நிகிடி - 0.50 லட்சம்
19. மிட்செல் சாண்ட்னர் - 0.50 லட்சம்
20. கே.எம்.ஆசிப் - 0.40 லட்சம்
21. மோனு குமார் - 0.20 லட்சம்
22. நாராயண் ஜெகதீசன் - 0.20 லட்சம்
23. ஆர். சாய் குமார் - 0.20 லட்சம்
24. ருத்ராஜ் கெய்க்வாட் - 0.20 லட்சம்
