‘புதுசா 4 ப்ளேயர்’!.. இந்த தடவ ‘தல’ தலைமையில் யார் யாரெல்லாம் விளையாட போறாங்கனு தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Dec 20, 2019 08:29 PM
சென்னை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வரும் 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் சென்னை அணி 4 புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது. முதலில் கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் விளையாடிய சாம் குர்ரனை 5.50 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது. இதனை அடுத்து கோல்டர் நைல்-ஐ எடுக்க முயன்றது. ஆனால் 8 கோடி ரூபாய் கொடுத்து மும்பை அணி அவரை தட்டி சென்றது.
இதனைத் தொடர்ந்து ஏலத்திற்கு வந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவை 6.75 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி எடுத்தது. அடுத்து ஜோஸ் ஹஜ்லேவுட்டையும் (2 கோடி), கடைசியாக தமிழக வீரர் சாய் கிஷோரையும் (20 லட்சம்) ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் இந்த சீசனில் 4 புதிய வீரர்கள் சென்னை அணிக்குள் வந்துள்ளனர்.
Now we are truly 24/7 #yellove! #PrideOfT20 #WhistlePodu #SuperFam 🦁💛 pic.twitter.com/Y1xISdIvvD
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2019
