பானிபூரி வித்து... பட்ட 'கஷ்டமெல்லாம்' வீணாகல... கோடிகளில் 'விலைபோன' 17 வயது வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Dec 20, 2019 12:30 AM
விஜய் ஹசாரே போட்டியில் இரட்டை சதமடித்ததன் வாயிலாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த யாஜஸ்வி ஜெய்ஸ்வால் இன்றைய ஐபிஎல் போட்டியில் கோடிக்கணக்கில் விலை போயிருக்கிறார். கிரிக்கெட் மீதான நம்பிக்கையால் 11 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி மும்பை வந்த ஜெய்ஸ்வால் பானிபூரி விற்பனை செய்தும், சிற்றுண்டி கடைகளில் வேலை பார்த்தும் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
![IPL Auction: RR Bought Yashasvi Jaiswal for 2.4 crore IPL Auction: RR Bought Yashasvi Jaiswal for 2.4 crore](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/ipl-auction-rr-bought-yashasvi-jaiswal-for-24-crore.jpg)
Don't worry MI, we will return him safely to Mumbai after the IPL. 👍#HallaBol https://t.co/h7EMDABgnl
— Rajasthan Royals (@rajasthanroyals) December 19, 2019
17 வயதான ஜெய்ஸ்வாலின் ஆரம்ப விலை 20 லட்சமாக இருந்தது. ஆனால் மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் போட்டி போட்டதால் அவரின் விலை கோடிகளில் உயர்ந்தது. முடிவில் 2.40 கோடிகளுக்கு ராஜஸ்தான் அணி இவரை ஏலத்தில் எடுத்துள்ளது. இதுகுறித்து மும்பை அணி ஜெய்ஸ்வாலை ஏலத்தில் எடுக்க முடியவில்லை என்று வருத்தத்துடன் கூற, பதிலுக்கு ராஜஸ்தான் அணி ஐபிஎல் முடிந்த கையோடு மும்பைக்கு அனுப்பி வைக்கிறோம் என கிண்டல் செய்துள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)