அந்த ஆல்-ரவுண்டருக்கு 'இத்தனை' கோடியா?... என்ன ஒரு 'முட்டாள்தனம்'... பெங்களூர் அணிமீது காட்டம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 20, 2019 09:00 PM

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை அனைத்து அணிகளும் போட்டிபோட்டு எடுத்தன. இதனால் அவர்கள் கோடிகளில் விலை போயினர். இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத பஞ்சாப், பெங்களூர், டெல்லி அணிகள் வெளிநாட்டு வீரர்களுக்கு பணத்தை வாரியிறைத்தன.

IPL 2020: Simon Doull Blasts Royal Challengers Bangalore

குறிப்பாக பெங்களூர் அணி தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை சுமார் 10 கோடி ஏலத்தில் எடுத்தது. அதேபோல ஆரோன் பிஞ்ச்சையும் அந்த அணி 4.5 கோடிகள் கொடுத்து எடுத்தது. இந்தநிலையில் முன்னாள் நியூசிலாந்து வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான சிம்மன் டூவல், '' என்ன நடக்கிறது இங்கே? கிறிஸ் மோரிஸை 10 கோடி கொடுத்து அணியில் எடுத்தது முட்டாள்தனமான முடிவு,'' என விமர்சனம் செய்துள்ளார்.