‘எப்படியும் என் பவுலிங்க நீங்க சந்திச்சே ஆகணும்’!.. பிரபல வீரருக்கு கலக்கல் பதிலளித்த பும்ரா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Dec 20, 2019 07:38 PM
மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் எடுக்கப்பட்டதால் இனி பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டியதில்லை என கிறிஸ் லின்னின் பதிவிற்கு பும்ரா கிண்டலாக பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. கடந்த சீசனில் கொல்கத்தா அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையான 2 கோடிக்கு வாங்கியது. இதனை அடுத்து கிறிஸ் லின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கிரேட் சிட்டி, தரமான அணி, பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம், பும்ராவுக்கு எதிராக விளையாட வேண்டியதில்லை’ என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த பும்ரா, ‘அணிக்கு வரவேற்கிறேன் கிறிஸ் லின். எப்படியும் வலை பயிற்சியில் நீங்கள் என்னை எதிர்கொள்ள வேண்டும்’ என கிண்டலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
Haha, welcome to the team! @lynny50 You’re still going to have to face me in the nets. 😋
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) December 19, 2019
