இந்த 4 பேரும் 'சின்னப் பசங்க' தான்... ஆனாலும் 'கோடிகளை' கொடுத்து... வாங்கிய 'ஐபிஎல்' அணிகள்... ஓவர் நைட்டில் அடித்தது 'ஜாக்பாட்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Dec 20, 2019 06:56 PM

13-வது சீசனுக்காக ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைப்பெற்ற நிலையில், இந்திய அணியின் புஜாரா, யூசுப் பதான் போன்ற மூத்த வீரர்கள் எடுக்கப்படவில்லை. ஆனால் இந்திய அணியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடி வரும், 4 இளம் வீரர்களை கோடிகள் கொடுத்து சில அணிகள் விலைக்கு வாங்கியுள்ளன.

4 uncapped Indian players who became overnight millionaires

1. யாஷஸ்வி ஜெய்ஸ்வால்:

கடந்த சில வாரங்கள் முன்பு, உள்ளூர் தொடரில் இரட்டை சதம் அடித்தன்மூலம் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்த மும்பை வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் 19 வயது இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார். இவரை 2.4 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

2. விராட் சிங்:

ஜார்கண்ட் வீரரான விராட் சிங், சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி தொடரில் 10 போட்டிகளில் 343 ரன்கள் குவித்து இருந்தார். விஜய் ஹசாரே தொடரில் 7 போட்டிகளில் 335 ரன்கள் குவித்து அசத்தினார். இவரை 1.90 கோடிக்கு வாங்கியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

3.ரவி பிஷ்னோய்:

லெக் ஸ்பின்னரான ரவி பிஷ்னோய் இளைஞர்கள் ஒருநாள் தொடரில் 7 போட்டிகளில் 12 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவரை பஞ்சாப் அணி போட்டி போட்டுக்கொண்டு 2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

4. ப்ரியம் கார்க்:

19 வயது இந்திய அணியின் கேப்டன் ப்ரியம் கார்க்-ஐ சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1.90 கோடிக்கு வாங்கியது.