அந்த பையன் அவ்ளோ 'வொர்த்' இல்ல... பிரபல அணியை... கடுமையாக 'விமர்சித்த' முன்னாள் கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Dec 20, 2019 08:31 PM
நேற்றைய ஏலத்தில் பஞ்சாப் அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டான் காட்ரலை 8.5 கோடிகள் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆரம்ப விலை 50 லட்சமாக இருந்த நிலையில் பிற அணிகளின் போட்டி காரணமாக காட்ரலை 8.5 கோடிக்கு எடுக்க வேண்டிய நிலைக்கு பஞ்சாப் ஆளானது.
இதுகுறித்து முன்னாள் வீரரும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் கம்பீர், '' பேட் கம்மின்ஸ், கிறிஸ் மோரிஸ் ஆகியோரை எடுக்க பஞ்சாப் அணி முயன்றது. ஆனால் அவர்களை எடுக்க முடியவில்லை. அந்த விரக்தியில் காட்ரலை 8.5 கோடிகள் கொடுத்து எடுத்துள்ளது. அவர் 145 கிலோமீட்டர் பந்து வீசுகிறார், எனினும் துல்லியமாக பந்து வீசும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கம்மின்ஸ், மோரிஸ் இருவரையும் எடுக்க முடியாத விரக்தியில் கும்ப்ளே காட்ரலை எடுத்து விட்டார் என நினைக்கிறேன். அவர் பாஸ்ட் பவுலிங்கில் கட்டர்கள் வீச முயல்கிறார். ஆனால் மொஹாலி ஆடுகளத்தில் அது எடுபடாது. கிராக்கி அதிகம் இருக்கும்போது அதற்கேற்ற வீரர்கள் இல்லை என்றால் இப்படித்தான் நடக்கும்,'' என விமர்சித்து இருக்கிறார்.