மொத்தம் 85 கோடி... 'டாப் 10' வீரர்கள் பட்டியலில்... இடம்பிடித்த ஒரே 'இந்தியர்' இவர்தான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 20, 2019 04:28 PM

நேற்றைய ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாட்டு வீரர்களுக்கு கடும் கிராக்கி நிலவியது. குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் 15.5 கோடிக்கும், மேக்ஸ்வெல் 10.75 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.

IPL Auction: Top 10 most expensive Players list here

இந்தநிலையில் அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட டாப் 10 வீரர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம்பிடித்து இருக்கிறார். சென்னை அணி சார்பாக 6.75 கோடிக்கு எடுக்கப்பட்ட பியூஷ் சாவ்லா தான் அந்த வீரர்.

அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள்:-

1. பேட் கம்மின்ஸ் - 15.5 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

2. கிளென் மேக்ஸ்வெல் - 10.75 கோடி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

3. கிறிஸ் மோரிஸ் - 10 கோடி (ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூர்)

4. ஷெல்டர்ன் காட்ரல் - 8.5 கோடி ( கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

5. நாதன் கோல்டர் நைல் - 8 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

6. சிம்ரான் ஹெட்மெயர் - 7.75 கோடி (டெல்லி கேபிடல்ஸ்)

7. பியூஷ் சாவ்லா - 6.75 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

8. சாம் கரண் - 5.50 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

9. இயான் மார்கன் - 5.25 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

10. மார்கஸ் ஸ்டோய்னிஸ் - 4.8 கோடி (டெல்லி கேபிடல்ஸ்)