இவரு இல்லாம எப்டி ப்ளே ஆஃப் விளையாடுறது..! முதுகு வலியால் பிரபல வீரர் திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 03, 2019 07:02 PM

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPL 2019: Kagiso Rabada out of IPL with back niggle

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது சீசன் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மிக சிறப்பாக அமைந்துள்ளது. கடந்த 2012 -ஆம் ஆண்டுக்குப் பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 11 சீசன்களாக டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் களமிறங்கிய அந்த அணி, இந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் என பெயர் மாற்றம் செய்து களமிறங்கியது.

அதேபோல் கேப்டனாக இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டனாக வழி நடத்தி வருகிறார். மேலும் அதிக இளம் வீரர்களை கொண்ட அணியாக டெல்லி அணி திகழ்ந்து வருகிறது. டெல்லி அணியின் பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க இளம் வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவின் பங்களிப்பு முக்கியத்துவம்  வாய்ந்தது. கடைசி ஓவரிகளில் ரன்களை அதிகம் செல்லாமல் கட்டுப்படுத்துவதில் இவரின் பங்கு அபரிதமானது.

சென்னை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் பயிற்சியின்போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அப்போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக டிரென்ட் போல்ட் உள்ளே வந்தார். இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. குறிப்பாக கடைசி ஓவரில் சென்னை அணி 21 ரன்கள் அடித்து அசத்தியது. இது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. போட்டி முடிந்த பின்னர் பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், இந்த போட்டியில் ரபாடாவின்  முக்கியத்துவத்தை உணர்ந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ரபாடாவின் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags : #IPL #IPL2019 #DELHICAPITALS #DC #RABADA