"என்னய்யா இது, 'ரீப்ளே'ல மர்மமான விஷயம் எல்லாம் நடக்குது..." ஆடிப் போக வைத்த 'ரிவ்யூ'... போட்டிக்கு நடுவே ஒரு சர்ச்சை 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு செய்யப்பட்ட ரிவ்யூ ஒன்று கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அஸ்வின் வீசிய பந்தை ஸ்மித் எதிர்கொண்டார். அப்போது ஸ்மித் எல்பிடபுள்யூ என்பது போல தெரிந்தது. இதற்கு இந்திய அணி வீரர்கள் அப்பீல் செய்த நிலையில், போட்டி நடுவர் அவுட் கொடுக்கவில்லை.
உடனடியாக இந்திய அணி ரிவ்யூ கேட்ட நிலையில், அதில் பந்து ஸ்டம்பை தொடாமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ரிவ்யூவில் இதற்கு அவுட் கொடுக்கப்படாத நிலையில், ஸ்டம்பிற்கு மிக அருகில் பந்து சென்றதால் அம்பயர் கால் என கூறப்பட்டது. அம்பயர் கால் என்பதால் இந்திய அணியின் ரிவ்யூவும் திரும்ப பெறப்பட்டது.
இதற்காக ஸ்க்ரீனில் காட்டப்பட்ட ரிவ்யூ தான் தற்போது பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. ஸ்மித்துக்கு வீசப்பட்ட பந்து நான்காவது ஸ்டம்ப் ஒன்றை கடந்து செல்வது போல ரிவ்யூவில் காட்டப்பட்டது. இதனால் மூன்றாவது ஸ்டம்பிற்கு அருகில் பந்து செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
அப்படி இருக்கும் பட்சத்தில் இந்திய அணி ரிவ்யூவை இழந்திருக்க வேண்டும். ஆனால், தவறாக தோன்றிய நான்காவது ஸ்டம்பிற்கு அருகே பந்து சென்றதால் அம்பயர் கால் கொடுக்கப்பட்டு இந்தியாவிற்கு ரிவ்யூவும் திரும்ப பெறப்பட்டது. ரீப்ளேயில் எப்படி நான்காவது ஸ்டம்ப் தெரிய முடியும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Have we heard any clarification from the authorities responsible for this? The mysterious fourth stump making an appearance on replays 😱😳 #AusvInd #DRS pic.twitter.com/IuphL4iTUT
— Aakash Chopra (@cricketaakash) January 9, 2021
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ராவும் இதுகுறித்து கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அது மட்டுமில்லாமல், பல தரப்பிலான விவாதங்களையும் இந்த தவறான ரீப்ளே ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
