'அந்த' நாட்டுல இருக்குற இந்தியர்கள்... 'இனி அத பத்தி கவலைப்பட தேவையில்ல...' - ஹேப்பி நியூஸை அறிவித்த இந்திய தூதரகம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா காரணமாக அபுதாபியில் இந்திய பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான போக்குவரத்துக்கள் கடந்த வருடத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது. மேலும், பாஸ்போர்ட் புதுப்பிக்கும் நடைமுறைகளும், விசா அப்ளை செய்யும் முறைகளும் நிறுத்தப்பட்டிருந்தன. அதன்காரணமாக, குறிப்பிட்ட மாதத்துக்குள் காலாவதியாக இருக்கும் இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளத்தாலும், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் பாஸ்போர்ட்டுகளை புதுப்பிப்பது தொடர்பாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 12 வயதுக்கு குறைவான சிறுவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நேரடியாக வந்து விண்ணப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்களது பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்தல் தொடர்பான விண்ணப்பங்களை மக்கள் தொடர்பு அதிகாரிகள் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள தொடர்ந்து அனுமதிக்கப்படுவர்' என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்திய பாஸ்போர்ட்டுகளை பெறுவதற்கும், புதுப்பிப்பதற்கும் விண்ணப்பங்களை பெற தற்போது துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.