‘எல்லாரும் சொல்றது சரிதான்..’ ஓய்வு குறித்துப் பேசியுள்ள தோனியின் பெற்றோர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jul 17, 2019 06:50 PM
தோனி இப்போதே ஓய்வு பெற வேண்டுமென அவருடைய பெற்றோர் விரும்புவதாக தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி கூறியுள்ளார்.
உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு தோனி ஓய்வு பெறலாம் என வெளியான செய்தியால் அடுத்து நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஒருவேளை அவர் ஓய்வு பெறாவிட்டாலும் அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்படுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து பிசிசிஐ தரப்பிலிருந்து தோனி 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறாமல் 15 பேரில் ஒருவராக அணிக்கு வழிகாட்டியாக செயல்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் தோனியின் சிறுவயது பயிற்சியாளரான கேசவ் பானர்ஜி அவருடைய பெற்றோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவர்கள், “அனைத்து ஊடகங்களும் தோனி ஓய்வு பெற வேண்டுமெனக் கூறி வருகின்றன. நாங்களும் அவர்கள் கூறுவது சரியென்றே நினைக்கிறோம். எங்களால் இவ்வளவு பெரிய சொத்தைப் பராமரிக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளனர்.
அதற்கு அவர்களிடம், “இத்தனை ஆண்டுகளாக இதையெல்லாம் பராமரித்து வந்துவீட்டீர்கள். உங்களால் இன்னும் ஒரு வருடம் இதைச் செய்ய முடியும்” என தான் கூறியதாக கேசவ் தெரிவித்துள்ளார்.