'கூல் ப்ரோ.. இந்த வீடியோவ ஏன் அப்லோடு பண்ணல?'.. பாண்ட்யா சகோதரர்களின் சுவாரஸ்ய ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Sep 11, 2019 07:34 PM

கோலி தலைமையில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதவிருக்கும் டி20 போட்டிகள் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது நிகழந்த சுவாரஸ்யங்களை ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருனல் பாண்ட்யா சகோதரர்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

but why didn’t you upload this video? pandya brothers

முதலில் ஹர்திக் பாண்ட்யா, வலைப் பயிற்சியில் தோனி ஸ்டைலில் ஒரு ஹெலிகாப்டர் ஷாட்டினை அடித்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு, பாண்ட்யா வெர்சஸ் பாண்ட்யா பயிற்சி, இந்த ரவுண்டை நான் கைப்பற்றினேன் பிக் ப்ரோ, ஆனால் உங்கள் தலைக்கு குறிவைத்ததற்கு மன்னிக்கணும் என்று பதிவிட்டிருந்தார்.

இதனை ரி-ட்வீட் செய்த 25 வயது இடது ஸ்பின்னரான க்ருனல் பாண்ட்யா, தான் பந்துவீசிய வீடியோவை பதிவிட்டு, இந்த வீடியோவை ஏன் அப்லோடு செய்யல? என்று கேட்டுள்ளார். இந்த வீடியோக்கள் இரண்டுமே ட்விட்டரில் வைரலாகி வருகின்றன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த ஹோம் சீரிஸ்தான், உலகக் கோப்பைக்குப் பிறகு ஹர்திக் பாண்ட்யா ஆடும் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET #KRUNALPANDYA #HARDIKPANDYA