5 நாள்ல 4 பேரு.. மொத்த படையையும் களத்துல இறக்குன போலீஸ்.. விசாரணைல இளைஞர் சொன்ன விஷயம்.. எல்லாரும் ஒருநிமிஷம் ஆடிப்போய்ட்டாங்க..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து கொலைகளை செய்துவந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதனால் உள்ளூர் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Also Read | இப்படியும் ஒரு துயர சம்பவமா..? தலை முடியால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் ஏர்போர்ட் அதிகாரிகள்..!
தொடர் சம்பவம்
மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் மக்ரோனியா-பாந்த்ரா சாலையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில் உத்தம் ரஜாக் என்பவர் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். கடந்த மே மாதம் மர்ம நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த ரஜாக்கை கல்லால் தாக்கி கொலை செய்திருக்கிறார். அதன்பிறகு, உள்ளூர் கல்லூரி ஒன்றின் வாட்ச்மேன் ஷம்பு ஷரன் துபே, பைன்சா எனும் பகுதிக்கு அருகில் வாட்ச்மேனாக பணிபுரிந்துவந்த கல்யாண் லோதி என இருவரும் இதேபோல தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து, சில தினங்களுக்கு முன்னர் மங்கள் அஹிர்வார் எனும் வாட்ச்மேன் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கல்லால் தாக்கப்பட்டிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பித்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
தனிப்படை
இதனையடுத்து தொடர் கொலைகளில் ஈடுபட்டு வரும் மர்ம நபரை பிடிக்க காவல்துறையினர் சிறப்பு படையை அமைத்தது. மேலும், சிசிடிவி கேமரா மூலம் கிடைத்த புகைப்படம் மூலமாக வரைபடம் ஒன்றை தயாரித்து கொலையாளியை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதனிடையே சாகர் எஸ்.பி தருண் நாயக் அந்த வரைபடத்தில் உள்ளவரைப் பற்றி துப்புக்கெடுபவருக்கு 30000 ரூபாய் பரிசு அறிவித்திருந்தார். இதனையடுத்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் கொலையாளியை தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை போபாலில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் சிவபிரசாத் துருவ் எனும் இளைஞரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
பரபரப்பு வாக்குமூலம்
விசாரணையில், இந்த தொடர் கொலைகளை தான் செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார் அந்த 19 வயது இளைஞர். மேலும், கைது செய்யப்படுவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்பாக மற்றொரு வாட்ச்மேனை தான் கொன்றதாக தெரிவிக்கவே, போலீசார் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். அதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டவருடைய உடலை போலீசார் மீட்டிருக்கின்றனர். இந்நிலையில், இதுகுறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது பெரிய கேங்க்ஸ்டர் ஆக வேண்டும் என விருப்பப்பட்டதால் இவ்வாறு செய்ததாக அந்த இளைஞர் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிகாரிகளே அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், கடைசியாக நடந்த 3 கொலை மற்றும் ஒரு கொலை முயற்சியை தான் செய்ததாகவும் இருப்பினும், மே மாதம் நடந்த கொலைக்கும் தனக்கு தொடர்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read | சந்தையில் சாம்சங் நிறுவனம் களமிறக்கும் Galaxy Z Fold4 போன்.. அப்படி என்ன ஸ்பெஷல்..?