"எனக்கும் அது நடந்துச்சு".. இனவெறி பேதத்துக்கு ஆளானதாக முன்னாள் நியூசி. கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் பரபரப்பு அறிக்கை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இனவெறி பேதத்தை எதிர்கொண்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் தெரிவித்திருக்கிறார். இது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | 27 வருஷமா பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்.. முதல் சந்திப்புல நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்.. !
ராஸ் டெய்லர்
கடந்த 2006 ஆம் ஆண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இணைந்தவர் ராஸ் டெய்லர். இக்கட்டான பல நேரங்களில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர். அவருடைய தலைமையில் நியூசிலாந்து அணி பல்வேறு வெற்றிகளை பெற்றது. உலக அளவில் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படும் ராஸ் T20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வகை போட்டிகளிலும் 450 மேட்ச்களில் விளையாடி 18,199 ரன்களை குவித்திருக்கிறார். 16 ஆண்டு காலம் நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ராஸ் கடந்த ஏப்ரல் மாதத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சுயசரிதை
இந்நிலையில், தன்னுடைய சுயசரிதையை Black & White என்னும் தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் ராஸ். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் பல தகவல்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் தான் நிறவெறி பேதத்திற்கு ஆளாக்கப்பட்டதாக ராஸ் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுபற்றி அவர்,"டிரெஸ்ஸிங் ரூமில் சில நேரங்களில் சக வீரர்களுக்கு இடையேயான கேலிப் பேச்சு கொஞ்சம் இனவெறி பேதத்தை சார்ந்து இருக்கும். அது புண்படுத்தும் வகையிலும் இருக்கும். ஆனால், அதைப்பற்றி பேசினால் மேலும் பிரச்சனைகள் ஏற்படும் என அதனை கடந்து வந்தேன். பெரும்பாலும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வெள்ளையர்களை சார்ந்தது போல இருக்கும். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும்பகுதி வெண்ணிலா லைன் அப்பில் நான் ஒரு பிரவுன் முகமாகவே பார்க்கப்பட்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
பாதி நல்லவன்
சக அணிவீரர்கள் இடையேயும் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இனவெறியை சார்ந்ததாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள ராஸ் டெய்லர்," சக வீரர் ஒருவர் என்னை பாதி நல்லவன் எனக் கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். உங்களுக்கு அதன் அர்த்தம் புரியாமல் போகலாம். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் நன்றாகவே தெரியும். இனவெறி தொனிக்கும் இதுபோன்ற இரட்டை அர்த்தம் கொண்ட கருத்துக்களை அவர்கள் வெறும் கேலிப் பேச்சாகவே எடுத்துக்கொண்டனர்" எனத் தெரிவித்திருக்கிறார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | "சின்ன வயசுலேர்ந்து கனவு" - தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் குறித்த உருக்கமான தகவல்.!