Tiruchitrambalam D Logo Top

ஸ்கூட்டரில் ஜாலி ரைடு போன விராட் - அனுஷ்கா ஜோடி??.. வைரலாகும் வீடியோ!!.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Aug 21, 2022 02:44 PM

இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்று வரும் நிலையில், அடுத்ததாக ஆசிய கோப்பை தொடரில் களமிறங்க உள்ளது.

Virat kohli and anushka sharma scooter ride on mumbai sources

Also Read | ஆன்லைனில் அதிகரிக்கும் 'பாஸ் ஸ்கேம்' நூதன மோசடி.. தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட வார்னிங் வீடியோ..!

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதனால், கே எல் ராகுல் தலைமையில் இந்திய அணி ஆடி வரும் நிலையில், இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2 - 0 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றி அசத்தி உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, ஆசிய கோப்பைத் தொடர் வருவதால், இந்திய அணிக்கு இது முக்கியமான தொடராகவும் பார்க்கப்படுகிறது. சமீப காலமாக, அடுத்தடுத்த தொடர்களில் தொடர்ந்து அசத்தி வரும் இந்திய அணி, ஆசிய கோப்பையை வென்று அசத்த வேண்டும் என்பது தான், ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Virat kohli and anushka sharma scooter ride on mumbai sources

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுடன் மும்பை சாலையில் பைக் ரைடு போனதாக வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், பச்சை நிற சட்டை மற்றும் கருப்பு பேன்ட் ஒன்று அணிந்த படி, முகம் தெரியாத அளவுக்கு ஹெல்மெட் ஒன்றை அணிந்து கொண்டிருக்கிறார்.

அவரது பின்னால், கருப்பு உடை அணிந்த படி, முகம் தெரியாத அளவுக்கு ஹெல்மெட் அணிந்த படி பெண் ஒருவரும் உள்ளார். சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் யாரும் இதனை கவனிக்கவில்லை என கூறப்படும் நிலையில், கோலி மற்றும் அனுஷ்கா தான் அவர்கள் என்பதை அறிந்து கொண்டு, அவரை பின் தொடர்ந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Virat kohli and anushka sharma scooter ride on mumbai sources

கோலி மற்றும் அனுஷ்கா தான் ஸ்கூட்டரில் வலம் வந்தார்கள் என இந்த வீடியோ வைரலாகி இருந்த நிலையில், இருவரும் இணைந்து ஒரு ஷூட்டிங்கில் பங்கு பெற்ற சம்பவம், அது கோலி மற்றும் அனுஷ்கா தான் என்பதை உறுதிபடுத்தும் விதமாக இருந்தது. இதற்கு காரணம், அதே பச்சை சட்டை மற்றும் கருப்பு பேன்ட் அணிந்த படி விராட் கோலி இருக்க, கருப்பு உடையில் அனுஷ்காவும் இருந்தார் என்பது தான்.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "அம்மாடியோவ்.. என்ன கேட்ச்'ங்க இது??".. கிரிக்கெட் ரசிகர்களை மிரள வெச்ச வீடியோ!!.. "பாவம்யா அந்த பேட்ஸ்மேன்!"

Tags : #VIRAT KOHLI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Virat kohli and anushka sharma scooter ride on mumbai sources | Sports News.