"இது பேட்ட பாயுற நேரம்".. தீவிர பயிற்சியில் இறங்கிய ரெய்னா.. வைரலாகும் வீடியோ.. பின்னணி என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்த சுரேஷ் ரெய்னா, பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் சிறந்த வீரராக வலம் வந்த சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி, மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.
ஐபிஎல் தொடர்களில் பல அசத்தலான இன்னிங்ஸ்களை ஆடிய ரெய்னா, சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றதும் தன்னுடைய ஓய்வினையும் அறிவித்திருந்தார்.
தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளில் ஆடி வந்த சுரேஷ் ரெய்னா, கடந்த 2021 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் ஆடி இருந்தார். ஆனால், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு முன்பு சென்னை அணி, ரெய்னாவை அணியில் இருந்து விடுவித்திருந்தது. இதன் பின்னர் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணிகளும் ரெய்னாவை ஏலத்தில் எடுக்கவில்லை.
பல ஆண்டுகளாக தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த ரெய்னாவை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்காமல் போனதால், அவரது ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். இதனையடுத்து, ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராகவும் ஈடுபட்டு வந்தார் சுரேஷ் ரெய்னா.
அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களாக தீவிர பேட்டிங் பயிற்சியில், தான் ஈடுபட்டு வரும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார்.காசியாபாத் பகுதியில், ரெய்னா பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அவருடன் உத்தரப்பிரதேச அணி வீரர் நலின் மிஸ்ராவும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னா, ஐபிஎல் தொடரிலும் இடம்பெறாத நிலையில், தற்போது பயிற்சி பெற்று வருவதால், உள்ளூர் கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ள போகிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
