அவர்கிட்ட மாட்டினா ‘துவம்சம்’ தான்... அதுக்கப்பறம் ‘ஆட்டமே’ வேற... மாத்துறதா எல்லாம் ‘ஐடியா' இல்ல... கோலி ‘திட்டவட்டம்’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Feb 26, 2020 05:30 PM

நியூசிலாந்துக்கு எதிரான  2வது டெஸ்ட் போட்டியிலும் பிரித்வி ஷாவுக்கே வாய்ப்பு என கேப்டன் விராட் கோலி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

IND vs NZ Virat Kohli Backs Prithvi Shaw Ahead Of 2nd Test

வெலிங்டனில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் பிரித்வி ஷா சொதப்ப, அவருக்கு பதிலாக ஷுப்மன் கில்லை அணியில் சேர்க்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள விராட் கோலி, “பிட்சின் தன்மையைப் புரிந்து கொள்வதுதான் முக்கியம். பிரித்வி ஷா மனதளவில் தெளிவாக இருந்தால் அவர் எந்தப் பந்தையும் துவம்சம் செய்து விடும் திறமையுடையவர். தன்னால் முடியும் என அவர் நினைத்து விட்டால் பிறகு அந்த ஆட்டமே வேறுதான். நம்முடைய அபிப்ராயமும் விரைவில் மாறும்.

நியூஸிலாந்தில் ரன் குவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க, அந்த சூழ்நிலையை அவர் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். ஸ்கோர் செய்ய ஆரம்பித்து விட்டால் அவருடைய தன்னம்பிக்கையும் வளரும். ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்புகளை பிரித்வி ஷா தானே உருவாக்கிக் கொள்வார். அவர் இயல்பிலேயே அடித்து ஆடக்கூடியவர், இப்போதைக்கு குறைந்த ரன்களை எடுப்பதை வைத்து அவரை எடை போட முடியாது. பெரிய ஸ்கோர்களை எடுக்கக் கூடியவர், அதை எப்படி எடுக்க வேண்டும் என்பதையும் தெரிந்தவர் பிரித்வி ஷா” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #VIRATKOHLI #INDVSNZ #TEAMINDIA #PRITHVISHAW