'ஐபிஎல் போட்டிக்கு’... ‘முன்னதாக நடக்கும் டி20 போட்டியில்’... ‘ஆசியா லெவன் அணியில் 6 இந்திய வீரர்கள்'... யார் யார் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக லெவன் அணிக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் விளையாடும் ஆசிய லெவன் அணியில் 6 இந்திய அணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜீபுர் ரஹ்மானின் 100-வது பிறந்த நாளையொட்டி, வங்கதேச கிரிக்கெட் வாரியம் மார்ச் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஆசியா லெவன் மற்றும் உலக லெவன் ஆகிய அணிகளுக்கு இடையே 2 டி20 போட்டிகளை டாக்காவில் நடத்துகிறது. இந்தப் போட்டியில் ஆசியா லெவன் அணியில் ஆட இந்திய வீரர்களை அனுப்ப வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம், பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக நடைபெறும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள இந்திய அணி சார்பில் 4 வீரர்கள் அனுப்பப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், 6 வீரர்கள் ஆசியா லெவன் அணியில் ஆட பிசிசிஐ அனுமதித்துள்ளது. அதன்படி, விராட் கோலி, கே.எல். ராகுல், ஷிகார் தவான், ரிஷப் பந்த், முகமது ஷமி, குல்தீப் ஆகிய 6 வீரர்கள் கலந்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4 வங்கதேச வீரர்கள், மலிங்கா உள்ளிட்ட 2 இலங்கை வீரர்கள், 2 ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த சந்தீப் கலந்துகொள்ள உள்ளனர். பாகிஸ்தான் நாட்டிலிருந்து ஒருவர் கூட இந்த அணியில் இல்லை.
ஆசிய லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கே.எல். ராகுல், 2. ஷிகர் தவான், 3. தமிம் இக்பால், 4. விராட் கோலி, 5. லிட்டோன் தாஸ், 6. ரிஷப் பந்த், 7. முஷ்பிகுர் ரஹிம், 8. திசாரா பெரேரா, 9. ரஷித் கான், 10. முஷ்டாபிஜுர் ரஹ்மான், 11. சந்தீப் லாமிச்சேன், 12. லசித் மலிங்கா, 13. முகமது ஷமி, 14. குல்தீப் யாதவ், 15. முஜீப் உர் ரஹ்மான்.
உலக லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. அலெக்ஸ் ஹேல்ஸ், 2. கிறிஸ் கெய்ல், 3. டூ பிளிசிஸ், 4. நிக்கோலஸ் பூரன், 5. ராஸ் டெய்லர், 6. பேர்ஸ்டோவ், 7. பொல்லார்டு. 8. அடில் ரஷித், 9. ஷெல்டன் காட்ரெல், 10. லுங்கி நிகிடி, 11. அண்ட்ரூ டை, 12. மெக்கிளேனகன்.