‘81 பந்துகளுக்கு 11 ரன்கள் தானா?’... ‘இது ரொம்ப ஓவர் பாஸ்’... ‘பொறுமைய சோதிக்காதீங்க’... ‘இந்திய வீரரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Feb 23, 2020 07:36 PM

நியூசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Cheteshwar Pujara trolled for Slow innings in IND Vs NZ

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு சுருண்டது. உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை கொண்ட இந்திய அணி இப்படி ரன்கள் சேர்க்காமல் சுருண்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு விளையாடிய நியூசிலாந்து அணி 348 ரன்கள் சேர்த்தது.

இதனையடுத்து 3-ம் நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி 183 ரன்கன் பின்தங்கிய நிலையில் தொடங்கியது. ஆனால் தொடக்கம் முதலே இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ரசிகர்கள் வருத்ததில் ஆழ்ந்தனர். பிரித்வி ஷா 14 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த பேட்டிங் தூண் புஜாரா, நீண்ட நேரம் விளையாடி, 81 பந்துகளை சந்தித்து, 11 ரன்கள் மட்டுமே சேர்த்தார். பின்னர் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

இதனால், ரசிகர்கள், கலாய்த்தும் அதேசமயத்தில் ஆதரவு தெரிவித்தும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ‘புஜாரா பவுலர்களின் பொறுமையை மட்டும் சோதிக்கவில்லை. கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களின் பொறுமையையும் சோதிக்கிறார்’ என்று ட்வீட்டியுள்ளனர். இதேபோல், முதல் இன்னிங்சில் 2 ரன்களில் ஆட்டமிழந்த விராட் கோலி, 2-வது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

Tags : #CRICKET #VIRATKOHLI #CHETESHWAR PUJARA #IND VS NZ