உலக லெவனுக்கு ‘எதிராக’ விளையாடும் 4 ‘இந்திய’ வீரர்கள்... ‘பாகிஸ்தானும்’ பங்கேற்கிறதா?... பிசிசிஐ அனுப்பிய ‘பட்டியல்’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Feb 21, 2020 11:13 PM

உலக லெவன் அணிக்கு எதிரான போட்டியில் ஆசிய லெவன் அணியில் விளையாட உள்ள 4 இந்திய வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

BCCI Sends Kohli Shami Dhawan Kuldeeps Name for Asia XI T20

வங்கதேசத்தில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி டாக்காவில் மார்ச் 18 மற்றும் 21ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்குமாறு பிசிசிஐக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து பிசிசிஐ ஆசிய லெவன் அணியில் விளையாட விராட் கோலி, முகமது ஷமி, குல்தீப் யாதவ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் பெயரை வங்கதேச கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளது.

முன்னதாக ஆசிய லெவன் அணியில் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் இந்திய அணி வீரர்கள் இணைந்து விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விளக்கமளித்த பிசிசிஐ இணை செயலாளர் ஜெய்ஷ் ஜார்ஜ், “ஆசிய லெவன் அணியில் விளையாட பாகிஸ்தான் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆகவே இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து இந்த போட்டியில் விளையாட மாட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், “பாகிஸ்தான் வீரர்கள் உள்ளூர் போட்டியான பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுகின்றனர். அந்த தொடர் மார்ச் 22ஆம் தேதி தான் முடிவடைகிறது. அதனால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நாங்கள் நிகாரித்துவிட்டோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

Tags : #CRICKET #VIRATKOHLI #BCCI #SHIKHARDHAWAN #MOHAMMEDSHAMI #KULDEEPYADAV #T20