VIDEO: 'மைக்ரோ' நொடியில் ஸ்டெம்பைத் 'தகர்த்த' பந்து... உண்மையிலேயே அவுட்டா?... 'திகைத்து' நின்ற இளம்வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 22, 2020 12:01 AM

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று அதிகாலை 4 மணியளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற  நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மயங்க் அகர்வால், பிரித்வி ஷா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

IND Vs NZ: Southee takes Prithvi Shaw\'s wicket, watch Video

தொடக்கம் முதலே பிரித்வி அதிரடி காட்ட, அகர்வால் ரன்கள் எடுக்காமல் டொக் வைத்துக்கொண்டே இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் எப்ப தான் சார் அடிப்பீங்க? மோடுக்கு போனார்கள். மறுபுறம் பிரித்வியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. 16 ரன்கள் எடுத்திருந்த பிரித்வி, சவுத்தியின் துல்லியமான பந்துவீச்சில் வீழ்ந்தார். 

சவுத்தி வீசிய பந்து மைக்ரோ நொடிக்கும் குறைவான நேரத்தில் ஸ்டெம்பைத் தகர்த்து பிரித்வி ஷாவின் அதிரடி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. விக்கெட் இழந்த பிரித்வி ஷா உண்மையிலேயே தான் அவுட்டா? என்று திகைத்து நின்று, சில நொடிகள் கழித்தே ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் வரிசையாக அவுட் ஆக தேநீர் இடைவேளை வரை போராடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 38* ரன்களுடனும், பண்ட் 10* ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அதோடு முடிவுக்கு வந்தது. இன்று 2-ம் நாள் ஆட்டம் அதிகாலை 4 மணிக்கு வெலிங்டன் மைதானத்தில் மீண்டும் தொடங்கும்.