இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட்?.. ஐசிசி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Feb 28, 2019 03:06 PM

கடந்த பிப்ரவரி 14 -ம் தேதி புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40 -க்கும் அதிகமான  சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இது உலகளவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

ICC assured the Indian board that it will address all issues

இதனை அடுத்து நேற்று காலை(27.02.2019) பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தது. உடனே இந்திய ராணுவத்தினரால் அந்த விமானங்கள் விரட்டி அடிக்கப்பட்டன. அதில் பாகிஸ்தானின் F16 ரக போர் விமானம் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் இருக்கும் நிலையில், உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுடைய இந்தியா விளையாடக்கூடாது என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கங்குலி, ஹர்பஜன் சிங் ஆகியோர் கூறினர். ஆனால் சச்சின், கபில் தேவ், கவாஸ்கர் போன்ற வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று துபாயில் ஐசிசியின் தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

Tags : #TEAMINDIA #INDVSPAK #WORLDCUP2019 #ICC #BCCI