"இனி ஜெயிக்கவா போறோம்னு சூட்கேஸ்-லாம் பேக் பண்ணிட்டோம்".. அதுக்கு அப்புறம் லக்ஷ்மன் - டிராவிட் நிகழ்த்திய மேஜிக்..மனம் திறந்த ஹேமங் பதானி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி 2001ஆம் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி குறித்து மனம் திறந்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருந்தது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. முதல் இன்னிங்சில் ஃபாலோவ் ஆன் பெற்ற நிலையில் அடுத்த இன்னிங்சில் இந்தியா ஆஸ்திரேலியாவை அதிர செய்தது. அதற்கு காரணமாக இருந்தவர்கள் விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் ராகுல் டிராவிட்.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 445 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக் சதமடிக்க ஹைடன், ஸ்லேட்டர், லாங்கர் ஆகியோரது பங்களிப்பினால் நல்ல ரன்னை எடுத்திருந்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இந்தியா வெறும் 171 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் ஃபாலோவ் ஆன் ஏற்படவே, இந்தியா மீண்டும் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தது.
Images are subject to © copyright to their respective owners.
லக்ஷ்மன் - டிராவிட் பார்ட்னர்ஷிப்
254 - 4 என்ற நிலையில் லக்ஷ்மன் டிராவிட்டுடன் கரம் கோர்த்து ஆஸ்திரேலியாவை திணறடித்தார். அதில் லக்ஷ்மன் 281 ரன்கள் குவிக்க, டிராவிட் 180 ரன்களை எடுத்திருந்தார். இதன் பலனாக இந்தியா 657 ரன்களை குவித்தது. இருவரும் சேர்ந்து 376 ரன்களை குவிந்திருந்தனர். அந்த போட்டியில் இந்தியா 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றிருந்தது. இதன் 22-வந்து நினைவு தினத்தை முன்னிட்டு ரசிகர் ஒருவர் இதுகுறித்த குறிப்பு ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
ஹேமங் பதானி
இதில் கமெண்ட் செய்திருக்கும் ஹேமங் பதானி,"3 ஆம் நாள் முடிவில், நாங்கள் எங்கள் சூட்கேஸ்களை பேக் செய்தோம். அவை நேராக விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட இருந்தது. குழு மைதானத்திலிருந்து நேராக விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்பது பலருக்குத் தெரியாது. பின்னர் இருவரும் (லக்ஷ்மன் - டிராவிட்) ஒரு நாள் முழுவதும் விக்கெட் இழப்பின்றி மாயாஜாலம் போல் பேட் செய்தனர். நாங்கள் ஹோட்டலுக்குத் திரும்பியபோது, எங்களிடம் சூட்கேஸ்கள் இல்லை, இரவு சுமார் 9 மணி வரை எங்களின் மேட்ச் உடையிலேயே இருந்தோம். அப்படியே இரவு உணவையும் முடித்தோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
Not many know that at the end of day 3 we had packed our suitcases, they were to be taken straight to airport and the team were to go straight to the airport from ground. And then these two batted like magicians without losing a wicket the entire day …cont https://t.co/jTyuUTD4o9
— Hemang Badani (@hemangkbadani) March 14, 2023
When we got back to the hotel we didn’t have our suitcases and were stuck with our match gear and tracks until about 9 pm or so. Lot of us ate dinner at the hotel restaurant in our whites.#INDvsAUS #laxman #dravid #BCCI
— Hemang Badani (@hemangkbadani) March 14, 2023