இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட்.. மைதானத்தில் இருநாட்டு பிரதமர்கள்.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று துவங்கி இருக்கிறது. இதில் இருநாட்டு பிரதமர்கள் கலந்துகொண்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "1500 படம் பண்ணிருக்கேன். நான் சொல்றேன்".. வெற்றிமாறன் குறித்து இளையராஜா.. ஆர்ப்பரித்த அரங்கம்.. வீடியோ..!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. இதனையடுத்து இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இதனால் 2-1 என்ற நிலையில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றிருக்கிறது. இருப்பினும், கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
அகமதாபாத்
இரு அணிகளுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று துவங்கி இருக்கிறது. இந்த போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா மற்றும் தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் இருநாட்டு பிரதமர்களை வரவேற்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
இதனையடுத்து, மைதானத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு பிரதமர் மோடி Cap-ஐ வழங்கினார். அதேபோல, ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்திற்கு அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் கேப்பை வழங்கினார்.
75 ஆண்டுகால உறவு
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 75 ஆண்டுகால நட்புறவை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மைதானத்தில் இரு அணிகளுக்கு எதிரான போட்டிகள் குறித்த முக்கியமான புகைப்படங்களை இருநாட்டு பிரதமர்களுக்கு முன்னாள் பயிற்சியாளரும் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி விளக்கினார்.
Images are subject to © copyright to their respective owners.
இதனையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது இருநாட்டு பிரதமர்களும் வீரர்களுடன் இணைந்து மரியாதை செய்தனர். தொடர்ந்து டாஸில் வென்ற ஆஸி. கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்திருந்தார். டாஸ்-க்கு உபயோகப்படுத்தப்பட்ட காயின், இந்தியா - ஆஸ்திரேலிய நாடுகளின் 75 ஆண்டுகால நட்புறவை பறைசாற்றும் விதமாக உருவாக்கப்பட்டதாக வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே மைக்கில் தெரிவிக்க அரங்கமே அதிரும் அளவு ரசிகர்கள் உற்சாக கூச்சலிட்டனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.
Incredible moments 👏👏
The Honourable Prime Minister of India, Shri Narendra Modiji and the Honourable Prime Minister of Australia, Mr Anthony Albanese take a lap of honour at the Narendra Modi Stadium in Ahmedabad@narendramodi | @PMOIndia | #TeamIndia | #INDvAUS | @GCAMotera pic.twitter.com/OqvNFzG9MD
— BCCI (@BCCI) March 9, 2023
Also Read | மகளிர் தின ஸ்பெஷல்.. நடிகை நமீதா செய்த நெகிழ்ச்சி காரியம்.. வைரலாகும் வீடியோ..!