பேருந்துக்குள் ஹோலி கொண்டாடிய இந்திய அணி.. விராட் கோலியின் தாறுமாறு ஸ்டெப்.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடும் வீடியோவை பேட்ஸ்மேன் சுப்மன் கில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Image Credit : Rohit sharma | Instagram
ஹோலி பண்டிகை
இந்தியாவே ஒரு பண்டிகை தேசம் என வெளிநாட்டினர் பலமுறை குறிப்பிடுவது உண்டு. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர் நம் மக்கள். அந்த வகையில் நாளை ஹோலி பண்டிகை என்பதால் இந்தியாவே களைகட்ட இருக்கிறது. வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசியும் வர்ணங்கள் கலந்த நீரை ஒருவர்மீது ஒருவர் ஊற்றியும் இந்த விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர் மக்கள். குறிப்பாக வட இந்தியாவில் இந்தப் பண்டிகை பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
Image Credit : Shubman Gill | Instagram
இந்திய அணி
இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடியிருக்கின்றனர். இந்த வீடியோவை இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, அக்சர் படேல், புஜாரா உள்ளிட்ட வீரர்கள் முகமெங்கும் வண்ண பொடிகள் பூசியபடி புன்னகையுடன் நிற்கின்றனர். சுப்மன் கில் வீடியோ எடுக்க விராட் கோலி பேருந்துக்கு உள்ளேயே ஸ்டெப் போட, அப்போது ரோஹித் ஷர்மா ஆச்சர்யப்பட்டபடி கூச்சலிடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. இதனையடுத்து இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இதனால் 2-1 என்ற நிலையில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றிருக்கிறது. இருப்பினும், கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற ஆர்வம் இப்போதே ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.
Image Credit : Shubman Gill | Instagram
வியாழக்கிழமை குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் வைத்து நான்காவது டெஸ்ட் போட்டி துவங்க இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த போட்டி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் அதிகரித்துவருகிறது.

மற்ற செய்திகள்
