" எனக்குன்னா உடனே அவுட் கொடுத்திருப்பாரு".. கோலியின் THUG LIFE சம்பவம்.. அம்பையரே சிரிச்சிட்டாரு😂.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அடித்த கமெண்டால் நடுவரே சிரித்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகியும் வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர்
தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.
அதற்கு பிறகு இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றபெற்றிருந்தது. இதனால் 2-1 என்ற நிலை ஏற்படவே, இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்காவது டெஸ்ட் போட்டிடிரா ஆகவே, 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி.
Images are subject to © copyright to their respective owners.
அனல் பறந்த பேட்டிங்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்தது. அந்த அணியின் கவாஜா 180 ரன்களை குவித்திருந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியும் பேட்டிங்கில் மிரட்டியது என்றே சொல்ல வேண்டும். கில் 118 ரன்கள் எடுக்க, கோலி 186 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 571 எடுத்திருந்தது. இதனையடுத்து 91 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணியை சேஸ் செய்தது ஆஸ்திரேலிய அணி. இருப்பினும் கடைசி நாளில் அந்த அணி 175 ரன்கள் எடுக்க மேட்ச் டிரா ஆனது.
விராட் கோலியின் கமெண்ட்
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிக்கொண்டிருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
அப்போது டிராவிஸ் ஹெட் பேட்டிங்கில் இருந்தார். அஸ்வின் வீசிய பந்து பேடில் பட, LBW -க்கு அப்பீல் செய்தார் அஸ்வின். ஆனால் நடுவர் நிதின் மேனன் அவுட் கொடுக்கவில்லை. அதன்பிறகு, DRS எடுக்கப்பட்டது. அதிலும் நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது. அப்போது பீல்டிங்கில் இருந்த கோலி,"ஒருவேளை நான் பேட்டிங் செய்திருந்தால் அவுட் கொடுக்கப்பட்டிருக்கும்" என்றார்.
இதனை கேட்ட நிதின் மேனன் புன்னகைக்க, பின்னர் தனது கட்டை விரலை புன்னகையுடன் உயர்த்தி காண்பித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Virat Kohli to Nitin Menon when Australian batsman given not out by umpire :
“ Mai hota to pakka out hota ” #NZvSL #Kohli #INDvAUS #CricketTwitter pic.twitter.com/fAnAgKGrRr
— Mufaddal John Singh Vohra (@mufasinghjohn) March 13, 2023