அடுத்த ரெக்கார்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் செஞ்ச சாதனை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Mar 10, 2023 06:40 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் புதிய சாதனையை படைத்திருக்கிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Ravichandran Ashwin pass anil kumble record for highest fifer

Images are subject to © copyright to their respective owners.

Also Read | வாத்தி.. இளம் வீரர்களுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்த தோனி.. வைரலாகும் வீடியோ..!

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. இதனையடுத்து இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இதனால் 2-1 என்ற நிலையில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றிருக்கிறது. இருப்பினும், கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.

நான்காவது டெஸ்ட்

இந்த சூழ்நிலையில் இரு அணிகளுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று துவங்கி இருக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து முதல் இன்னிங்க்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் அந்த அணி 480 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா 180 ரன்களையும், க்ரீன் 114 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியின் ஷமி 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Ravichandran Ashwin pass anil kumble record for highest fifer

Images are subject to © copyright to their respective owners.

அஸ்வின் சாதனை

இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் 32 வது முறையாக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் சொந்த மண்ணில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற கும்பிளேவின் சாதனையை முறியடித்திருக்கிறார் அஸ்வின். இந்தியாவில் 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 முறை 5 விக்கெட்டுகளை கும்பிளே வீழ்த்தியிருந்தார். தற்போது 26 வது முறையாக 5 விக்கெட்களை வீழ்த்தி அந்த சாதனையை முறியடித்திருக்கிறார் அஸ்வின்.

Ravichandran Ashwin pass anil kumble record for highest fifer

Images are subject to © copyright to their respective owners.

அதேபோல, சொந்த மண்ணில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் அஸ்வின். 45 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்தையா முரளிதரன் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் அஸ்வின் மற்றும் இலங்கையின் ரங்கனா ஹெராத் ஆகியோர் உள்ளனர்.

Also Read | பாட்டியின் செயினை குறிவைத்த மர்ம நபர்.. 10 வயது பேத்தி செஞ்ச தரமான சம்பவம்.. திகைச்சு போய்ட்டாங்க எல்லோரும்..!

Tags : #CRICKET #RAVICHANDRAN ASHWIN #ANIL KUMBLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ravichandran Ashwin pass anil kumble record for highest fifer | Sports News.