பாட்டிலை மிஸ் பண்ணிய இஷான் கிஷன்.. அடுத்த கணமே ஜாலியா ரோஹித் செஞ்ச விஷயம்.. வைரல் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Mar 10, 2023 07:47 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

Rohit Sharma Gesture after ishan kishan miss bottle in fourth test

Images are subject to © copyright to their respective owners.

Also Read | மேலே உயர்ந்த பந்து.. வேகமா ஓடி வந்த வீராங்கனை.. சட்டுன்னு நடந்த மேஜிக்.. மெய்சிலிரித்து பார்த்த ரசிகர்கள்!!.. வைரல் வீடியோ!!

முன்னதாக, முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த சூழலில், 3 ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, அகமதாபாத் மைதானத்தில் வைத்து தற்போது நடைபெற்று வருகிறது.

உஸ்மான் கவாஜா - கேமரூன் க்ரீன்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. குறிப்பாக தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைக்க, ஆஸ்திரேலிய அணி சிறந்த ரன்னை எட்டவும் செய்திருந்தது.

Rohit Sharma Gesture after ishan kishan miss bottle in fourth test

Images are subject to © copyright to their respective owners.

கவாஜா 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் எடுத்து.அசத்த, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி இருந்தார். தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட்டுகள் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது.

Rohit Sharma Gesture after ishan kishan miss bottle in fourth test

Images are subject to © copyright to their respective owners.

ஆவலில் ரசிகர்கள்?..

இன்னும் 3 நாட்கள் மீதம் இருப்பதால், இந்த போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்பது குறித்தும் ரசிகர்கள் பல விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தான், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நேரடியாக முன்னேற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rohit Sharma Gesture after ishan kishan miss bottle in fourth test

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் நடந்த சம்பவம் ஒன்று தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தவற விட்ட இஷான் கிஷன்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணியில் இளம் வீரர் இஷான் கிஷன் இடம்பிடித்துள்ளார். ஆடும் லெவனில் அவர் இடம்பெறவில்லை என்றாலும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நடுவே இந்திய வீரர்களுக்காக மைதானத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். அப்போது ரோஹித் கொடுத்த தண்ணீர் பாட்டிலை இஷான் கிஷன் வாங்குவதற்குள் அது கீழே தவறி விழுந்ததாக தெரிகிறது.

Rohit Sharma Gesture after ishan kishan miss bottle in fourth test

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து மீண்டும் பாட்டிலை எடுக்க இஷான் வர, முதலில் அவர் தவற விட்டதை குறிப்பிட்டு கேப்டன் ரோஹித் ஜாலியாக இஷான் கிஷனை அடிப்பது போன்றும் ஜாலியாக சைகை காட்டி இருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளிலேயே.. டிராபிக்கில் காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்த வாலிபர்.. அதிர்ச்சியில் உறைந்த மனைவி!!

Tags : #CRICKET #ROHIT SHARMA #ISHAN KISHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rohit Sharma Gesture after ishan kishan miss bottle in fourth test | Sports News.