"தல தோனி கேப்டன்சி.. ".. CSK வீரர் அஜிங்கியா ரஹானே உருக்கம்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான அஜிங்கியா ரஹானே திருச்சியில் நடைபெற்ற கிரிக்கெட் அகாடமி திறப்பு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
ஐபிஎல் 2023
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னையில் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
திருச்சியில் ரஹானே
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரஹானே திருச்சியில் நடைபெற்ற கிரிக்கெட் அகாடமி திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கலா நிகேதன் பள்ளியும் இணைந்து இந்த அகாடமியை துவங்கி இருக்கின்றன. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஹானே, மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணியில் விளையாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த முறை சென்னை அணி கோப்பையை வெல்லும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இளம் வீரர்கள்
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் சிறிய நகரங்களில் இருந்து வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்து வருவதாகவும் எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,"மாவட்டங்கள் தோறும் கிரிக்கெட்டை கொண்டு சேர்ப்பது முக்கியமானது. ஏற்கனவே கிராமப்புற பகுதிகளுக்கும் கிரிக்கெட்டின் தாக்கம் பரவி வருவதையும், பெரிய நகரங்களில் இருந்து மட்டுமின்றி சிறிய மாவட்டங்களில் இருந்தும் வீரர்கள் வருவதையும் நான் அறிவேன். வரும் ஆண்டுகளில், தங்கள் மாநிலங்கள் மற்றும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல வீரர்களை சிறிய மாவட்டங்களில் இருந்து காண்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.