"அவங்கள கிரவுண்ட்-ல இருந்து விரட்டுங்க".. சீண்டிய ரசிகர்கள்.. ரஹானே எடுத்த துணிச்சலான முடிவு.. மவுனம் கலைத்த சிராஜ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.
கவாஸ்கர் பார்டர் டெஸ்ட்
தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.
கடந்த 2020 - 21 காலகட்டத்தில் இதே கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றிருந்தது. ஆரம்பத்தில் சறுக்கிய இந்திய அணியை வழிநடத்திய ரஹானே 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Images are subject to © copyright to their respective owners.
சிராஜை சீண்டிய ரசிகர்கள்
அந்த தொடரில் சிட்னியில் நடைபெற்ற போட்டியின்போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் முகமது சிராஜை நிறவெறியை தூண்டும் விதத்தில் பேசினர். இதனையடுத்து இதுகுறித்து அவர் நடுவர்கள் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரஹானேவிடம் புகார் அளித்தார். அப்போது அவருக்கு ஆதரவாக இருந்த ரஹானே நிறவெறியை தூண்டும் விதத்தில் பேசிய ரசிகர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றும்படி நடுவரிடம் கூறியிருந்தார்.
ரஹானே எடுத்த முடிவு
இந்நிலையில், இதுகுறித்து தற்போது ஆர்சிபி அணியின் பாட்காஸ்டில் பேசியுள்ள சிராஜ்,"சிட்னியில் நடைபெற்ற போட்டியில் ரசிகர்கள் சிலர் கருப்பு குரங்கு என என்னை அழைத்தனர். நான் அதனை தவிர்த்துவிட்டேன். மீண்டும் அதேயே செய்தார்கள். பின்னர் இதுகுறித்து நடுவர்கள் மற்றும் கேப்டன் ரஹானேவிடம் கூறினேன். அப்போது ரஹானே பாய் எனக்கு ஆதரவாக இருந்தார்" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
தொடர்ந்து பேசியுள்ள சிராஜ்,"உடனடியாக நடுவரிடம் சென்ற ரஹானே இதற்கு முடிவு எடுக்கப்படவில்லை என்றால் எங்களால் மைதானத்தை விட்டு வெளியேற முடியும். ஆனால், நாங்கள் இந்த விளையாட்டை மதிக்கிறோம். ஆகவே நாங்கள் செல்ல மாட்டோம். ஆகவே, அவர்களை மைதானத்தை விட்டு விரட்டுங்கள் எனக் கூறினார்" என்றார்.

மற்ற செய்திகள்
