மகளிர் தினம்: குஜராத் - பெங்களூரு அணி போட்டியை இலவசமாக பார்க்க ஏற்பாடு.. WPL -ன் அசத்தல் முயற்சி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமகளிர் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற இருக்கும் குஜராத் - பெங்களூரு அணிக்கு இடையேயான போட்டியை இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.
உலக அளவில் மிகவும் பிரபலமான டி 20 லீக் தொடர்களில் ஒன்று ஐபிஎல். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் சூழலில், உலக அளவில் ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.
மகளிர் பிரீமியர் லீக் தொடர்
இதனிடையே முதல் முறையாக மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரும் ஆரம்பமாகி உள்ளது. இதில் ஐபிஎல் அணிகள், மகளிர் அணியையும் நிர்வகித்து வரும் சூழலில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகள் ரசிகர் மத்தியில் அதிகம் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி இருந்தது. மொத்தமாக ஐந்து அணிகள் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இடம் பெற்றுள்ளது.
இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், UP வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் ஜெயிண்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ள சூழலில் இதுவரை 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. ஆடவர்களுக்கான தொடர் போல பெண்களுக்கும் மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாகி உள்ளது, உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
மகளிர் தினம்
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் தேதி அன்று, "சர்வதேச மகளிர் தினம்" உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தவும், பெண்களுக்கான உரிமைகள் கிடைத்திட வேண்டும் என்பதை நிலைநாட்டவும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இலவச டிக்கெட்
இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு, குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியை அனைவருக்கும் இலவசமாக டிக்கெட் வழங்கப்பபடுமென கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. இந்த போட்டி மும்பையில் உள்ள Brabourne மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
முன்னதாக, இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து போட்டிகளையும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இலவசமாக காணலாம் என கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | அட.. நம்ம ‘சந்திரமுகி 2’ கங்கனாவுக்கு பிடிச்ச படங்கள் இதுதான்.. லிஸ்ட் போட்டு சொல்லிட்டாங்க.

மற்ற செய்திகள்
