VIDEO : "மேட்ச் ஜெயிச்சதுல 'குஷி'யா இருக்கீங்க போல..." போட்டிக்கு பின்னர் வேற லெவலில் 'FUN' பண்ணிய மும்பை 'வீரர்'கள்... அசத்தல் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிளே ஆஃப் சுற்றின் குவாலிஃபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியிருந்தன.

இந்த போட்டியில் மும்பை அணி, டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு ஆறாவது முறையாக முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் குவித்தனர். இஷான் கிசான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக ஆடினர்.
பின்னர் ஆடிய டெல்லி அணி ஒரு ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் அந்த அணியால் மீள முடியாத நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. மும்பை அணி வீரர் பும்ரா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, போட்டி முடிவுக்கு பின்னர் மும்பை அணி வீரர்களான பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் போட்டியில் தங்களது பங்கு குறித்து ஜாலியாக உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த க்ருணால் பாண்டியாவிடம், 'legendary க்ருணால் பாண்டியா இங்கு உள்ளார்' என பும்ரா கிண்டலாக தெரிவித்தார். அப்போது க்ருணாலிடம் அவரது சகோதரர் ஹர்திக் பாண்டியா, 'ஆட்டத்தில் நீங்கள் வீசிய பவுன்சர் பந்துகளை குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?. ஏனென்றால் அந்த பந்தை யாரும் பார்க்கவில்லை' என நக்கல் கேலி ஒன்றை முன் வைத்தார்.
Discussing yorkers and big sixes with Jasprit Bumrah and Hardik Pandya 🗣️💪
P.S. - Krunal Pandya makes a guest appearance to add some fun on the microphone 😎 #Dream11IPL #MIvDC
Watch the full interview 👉 https://t.co/vW0cseyezG pic.twitter.com/Rk8uRnWpk4
— IndianPremierLeague (@IPL) November 6, 2020
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில், மும்பை அணி வீரர்கள் மிக ஜாலியாக பேசிக் கொண்ட இந்த வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
