'பிரபல' நடிகையை.. குடும்பத்தினருக்கு 'அறிமுகம்' செய்து வைத்த 'கிரிக்கெட்' வீரர்?.. விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 23, 2019 03:56 PM

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது முதுகுப்பகுதியில் அறுவைசிகிச்சை செய்து மருத்துவமனை ஓய்வில் இருக்கிறார்.

Hardik Pandya introduced Natasa Stankovic to his parents, Reports

இவர் ஓய்வில் இருந்தாலும் இவர் குறித்த தகவல்களுக்கு பஞ்சம் இல்லை. அந்தவகையில் சமீபத்திய தகவல் இந்தி பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக்கை தனது வீட்டினருக்கு அறிமுகம் செய்து வைத்தது தான்.

கடந்த மே மாதம் நடாஷாவை, ஹர்திக் தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், அப்போது அவரது வீட்டின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் அங்கே இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இந்த செய்திதான் தற்போது பாலிவுட்டின் ஹாட் டாபிக் ஆக உள்ளது.