இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Oct 22, 2019 11:55 AM
1. பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
2. இன்போசிஸ் நிறுவனத்தின் மீது புகார் எழுந்ததை அடுத்து கடந்த 6 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதன் பங்குகள் சரிந்துள்ளது.
3. சமூக வலைத்தளங்களை நெறிமுறைப்படுத்தும் புதிய வழிமுறைகளை 3 மாதத்தில் வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
4. கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி மாவட்டங்களில் அதிக கனமழையும், சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
5. தோனி ஓய்வு அறையில் தான் உள்ளார். வாருங்கள். ஹலோ சொல்லுங்கள் என கேள்வி கேட்ட செய்தியாளருக்கு விராட் அளித்த பதில் வைரலாகி வருகிறது.
6. ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனம் இலவசம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
7. நிலவை ஆய்வு செய்ய கடந்த 2009-ம் ஆண்டு இந்தியாவின் முதல் விண்கலமாக நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன்-1 தற்போது 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர்.
8. உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு வருகின்ற 2024-ம் ஆண்டு அமெரிக்காவை விட அதிகமாக இருக்கும் என ஐ.எம்.எஃப் (சர்வதேச நிதியம்) கணித்துள்ளது.
9. ரஜினி கட்சி தொடங்கினாலோ, பாஜகவில் சேர்ந்தாலோ தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
10. சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்து பதுக்கி வைத்து விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும், சீனப் பட்டாசுகளை பயன்படுத்துவது வெடிப்பொருட்கள் சட்டத்திற்கு எதிரானது எனவும் சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.