‘தல’ய பாத்து எவ்ளோ நாளாச்சு..! ‘தோனி... தோனி’.. தெறிக்கவிட்ட ரசிகர்கள்..! வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 22, 2019 07:04 PM

புதிய காரில் ராஞ்சி மைதானத்துக்கு வந்த தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MS Dhoni seen riding new Jonga car, used by Indian Army

இந்தியா-தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வொய்ட்வாஷ் செய்து இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. இதில் ரோஹித் ஷர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் கடைசி டெஸ்ட் நடைபெற்றதால், போட்டியை நேரில் காண தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை அடுத்து டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் தோனியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்நிலையில் புதிய ஜாங்கா காரில் தோனி ராஞ்சி வீதிகளில் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வகையான கார் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #MSDHONI #BCCI #INDVSA #CRICKET #JONGA