IPL2020: தொடர்ந்து.. 3 'ஹாட்ரிக்' ஐபிஎல் கோப்பைகளை வென்ற.. 'கலக்கல் ராஜா'வுக்கு வாழ்த்துக்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 23, 2019 12:57 PM

ரசிகர்களின் பேவரைட் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி தங்களது அணி வீரர்கள் மட்டுமின்றி பிற வீரர்களின் வெற்றிகளுக்கும் வாழ்த்துக்களை கூறி வருகிறது. அதேபோல தனது அணி வீரர்களின் பிறந்தநாளுக்கும் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்து வருகிறது.

Super Birthday to the Kalakkal Super King, CSK wished Karn Sharma

அந்த வகையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சென்னை அணியின் பந்துவீச்சாளர் கரண் ஷர்மாவுக்கு சென்னை அணி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

அதில், '' தொடர்ச்சியாக 3 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கலக்கல் சூப்பர் கிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இதேபோல மேலும் பல கோப்பைகளை நீங்கள் வெல்ல வேண்டும்,'' என மனதார வாழ்த்தியுள்ளது. பதிலுக்கு கரண் ஷர்மா, '' நன்றி,'' என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.