மறுபடியும் 'அரோகரா'.. 'சிஎஸ்கே' யாரை 'ப்ரொமோட்' பண்ணி இருக்காங்க பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 21, 2019 05:42 PM

கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி முதல் ரெண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது. தற்போது 3-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

Chennai Super Kings wished Rohit Sharma and Rahane

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சதங்களாக அடித்து தென் ஆப்பிரிக்க அணியை காலி செய்தது. ரோஹித் சர்மா இரட்டை சதங்கள் அடிக்க, ரஹானே சதம் அடித்தார். ஜடேஜா அரை சதமும், உமேஷ் யாதவ் 31 ரன்களும் குவித்தனர். இந்திய அணி 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.தற்போது தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

இந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரட்டை சதங்கள் அடித்த ரோஹித் ஷர்மாவையும், சதம் அடித்த ரஹானேவையும் மனந்திறந்து பாராட்டியுள்ளது. இதுகுறித்து சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில், ''100-க்கு அரோகரா,'' என பாராட்டி இருந்தது. மீண்டும் ரஹானே சதம் அடிக்க, ''மீண்டும் ஒரு தடவை 100-க்கு அரோகரா,'' என ரஹானேவையும் பாராட்டியது.

இதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம ஆளு துருவ் ஷோரி விஜய் ஹசாரே டிராபியில் விளையாடி வருகிறார். அவரை ப்ரொமோட் செய்யுங்கள். இவரை ராஜஸ்தான் அணி ப்ரொமோட் செய்யும் எனக்கூற, அதுவும் சரிதான் என அடுத்த ட்வீட்டில் துருவை ப்ரொமோட் செய்து வருகிறது.

Tags : #CSK #CRICKET