இதுக்கு ஒரு 'எண்டு' கெடையாதா... 'ஃபேஸ் ஆப்' போட்டோவோட களத்தில் குதித்த 'ஹர்பஜன் சிங்'... அதுல 'கங்குலி' பண்ண கமெண்ட் தான் 'தரம்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக 'ஃபேஸ் ஆப்' பயன்படுத்தி ஆணைப் பெண்ணாக மாற்றி, அதே போல பெண்ணை ஆணாக மாற்றி பகிரப்படும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், ரோகித் சர்மா புகைப்படத்தை பெண்ணாக மாற்றி 'நீங்கள் க்யூட்டாக இருக்கிறீர்கள்' என பதிவிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதே போல, இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புகைப்படத்தை பெண்ணாக மாற்றி 'இதில் யாரை உங்களது கேர்ள் ஃபிரெண்டாக தேர்வு செய்வீர்கள்' என பதிவிட்டிருந்தார்.
இந்த இரண்டு பதிவுகளும், நெட்டிசன்களிடையே வைரலானதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது பங்கிற்கு இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான கங்குலி, சச்சின், டிராவிட், சேவாக் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். 'யுவராஜ் சிங் கேட்டது போலவே இதில் நீங்கள் யாரை டேட் செய்ய விரும்புகிறீர்கள்?' என பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தின் கீழ் கங்குலி, 'புகைப்படத்தின் நடுவில் கண்ணாடி அணிந்திருக்கும் பெண்ணை எனக்கு பிடித்துள்ளது' என கங்குலி போட்டோவை அவரே கிண்டலாக தேர்வு செய்தார். வழக்கம் போல இந்த பதிவும் நெட்டிசன்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
