இவர் தான் இந்தியாவோட 'மேட்ச்' வின்னர்... கை காட்டிய 'ஹர்பஜன் சிங்'... கொஞ்சம் 'சர்ப்ரைஸ்' பதில் தான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் தங்களது பொழுதினை வீட்டிலேயே கழித்து வருகின்றனர். இன்னும் சிலர், தங்களது சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இதனையடுத்து, நிகழ்ச்சி ஒன்றிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ஹர்பஜன் சிங்கிடம் இந்திய அணியின் சிறந்த மேட்ச் வின்னர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஹர்பஜன் சிங், 'என்னை பொறுத்தவரை அனில் கும்ப்ளே தான் சிறந்த மேட்ச் வின்னர். அவர் மட்டுமே இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த மேட்ச் வின்னர் என நினைக்கிறேன். அவரின் மனஉறுதி எப்படி என்றால், எந்த ஒரு பேட்ஸ்மேனையும் எந்த சூழலிலும் அவரால் அவுட் ஆக்க முடியும், அதை அவர் நிரூபித்தும் காட்டி இருக்கிறார்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
