ஹலோ 'மக்களே'... இந்த 15 பேருல உங்க கேர்ள் ஃபிரெண்ட் 'சாய்ஸ்' யாரு... அதிகம் பேரு இவர தான் செலக்ட் பண்ணிருக்காங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக 'ஃபேஸ் ஆப்' பயன்படுத்தி ஆணைப் பெண்ணாக மாற்றி, அதே போல பெண்ணை ஆணாக மாற்றி பகிரப்படும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதனை பல முன்னணி பிரபலங்களும் தங்களது சமூக வலைத்தளங்களில் இந்த ஃபேஸ் ஆப் புகைப்படங்கள் மூலம் நிரப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போதுள்ள இந்திய அணி வீரர்கள் புகைப்படத்தை மொத்தமும் பெண்களாக மாற்றி பகிர்ந்திருந்தார். அதில், 'இதில் யாரை நீங்கள் உங்கள் கேர்ள் ஃபிரெண்டாக தேர்வு செய்வீர்கள்?, நான் நாளை பதில் சொல்கிறேன்' என பதிவிட்டார்.
அவர் புகைப்படம் பகிர்ந்த சிறிது நேரத்தில் பலர் தங்களது விருப்பத்தை கமெண்ட் மூலம் தெரிவித்தனர். இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங், 'நான் புவியை தான் தேர்ந்தெடுப்பேன்' என்று கூற, ஆஷிஷ் நெஹ்ராவின் மனைவியும் தனது ஃபேவரைட் புவி என்று கூறினர். பாலிவுட் நடிகர் ஆஷிஷ் சவுத்ரி, நடிகர் கரண் வாஹி ஆகியோரும் தங்களது வாக்கினை புவிக்கே அளித்தனர்.
அதே போல பல கிரிக்கெட் ரசிகர்களும் புவனேஷ்வர் குமாரை தான் தேர்வு செய்தனர். இதையடுத்து, இறுதியில் ஆஜரான புவனேஷ்வர் குமார், 'நான் புவியைத் தான் தேர்வு செய்வேன்' என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார். முன்னதாக சில தினங்களுக்கு முன் இந்திய அணிய சுழற்பந்து வீச்சாளர் சாஹல், ரோகித் ஷர்மாவின் புகைப்படத்தை பெண் போல மாற்றி, 'ரோகித் ஷர்மா, நீங்கள் க்யூட்டாக இருக்கிறீர்கள்' என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
