'ஐபிஎல் போட்டியில்'... 'சில அதிரடி மாற்றங்கள்'... 'ஃபைனல் மேட்ச் எங்கே?... 'அனைத்தையும் தெரிவித்த கங்குலி'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jan 27, 2020 10:55 PM

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது உள்ளூர் போட்டியான ஐபிஎல் டி20.  இந்தப் போட்டி எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருப்பார்கள்.

IPL 2020: 13th Season begins in March 29th, Final in Mumbai

இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்துக்குப்பின் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை இரவு 8 மணிக்கு பதிலாக அரைமணி நேரம் முன்னதாக 7.30 மணிக்கே துவங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால், வழக்கம் போல் மாலை 4 மணிக்கும், இரவு 8 மணிக்கும்தான் போட்டி தொடங்கும்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 29-ல் துவங்கி, மே 24 வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, உலகின் மிகப்பெரிய மைதானமாக அஹமாதாபாத்தில் தயாராகும் மைதானத்தில் இறுதிப் போட்டி நடத்தப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மும்பையில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஐபிஎல் போட்டியில் புதிய விதிமுறைகள் அறிமுகமாகின்றன. நோ-பாலுக்கு மூன்றாவது நடுவரை அணுகும் முறை அறிமுகமாகிறது.

அதேபோல டெஸ்ட் போட்டியில் இருப்பது போன்று கன்கஸன் மாற்று வீரரைக் களமிறக்கும் முறை அறிமுகமாகிறது. அதாவது ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் போனால், அவருக்குப் பதிலாக மற்றொரு வீரரைக் களமிறக்கி விளையாட வைக்கலாம். மேலும் ஹர்திக் பாண்டியா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘அவரின் உடல்நிலை முழுமையாகக் குணமடையவில்லை. அவர் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் தங்கி இருக்கிறார். அவர் குணமடைந்து விளையாடுவதற்குச் சிறிது காலமாகும்’ என்றார்.