சேப்பாக்கில் நம் 'தலைவன் இருக்கிறான்' ... 'மாஸ்டர்', 'வலிமை' ஆரம்பித்து .... 'அண்ணாத்த' வரை இழுத்த ஹர்பஜன் சிங் !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 09, 2020 07:33 PM

ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் சென்னை வந்தடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ஹர்பஜன் சிங் செய்த ட்வீட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Harbhajan Singh enters Chennai with a mass tweet

ஐ.பி.எல் போட்டிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மற்ற ஐ.பி.எல் அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விவரங்கள் தினமும் இணையதளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன. சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது, கேப்டன் தோனியின் பேட்டிங் வீடியோ என தினமும் சென்னை அணி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான ஹர்பஜன் சிங் செய்த ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தது முதல் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது சென்னை வந்துள்ள ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ' இந்த ஐ.பி.எல் நம்ம டீம் செம்ம வலிமை மாப்பி. தளபதி ஸ்டைலில் தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெரில' என பல சினிமா வார்த்தைகளை ஒன்று சேர்த்து நீண்ட வாசகம் ஒன்றை தமிழில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் முடிந்ததும் ஹர்பஜன் சிங் செய்த டிவீட்கள் வைரலாகி வந்த நிலையில் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஹர்பஜன் சிங் ட்வீட் செய்ய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #HARBHAJAN SINGH #MS DHONI #IPL 2020 #CSK