‘உருவத்தை வைத்து ட்விட்டரில் கலாய்த்த ரசிகர்’.. பிரபல வீரரின் இணையத்தை வென்ற ‘மாஸ் ரிப்ளை’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Aug 09, 2019 02:33 PM

ட்விட்டரில் தன்னை அழகாக இல்லை என்று விமர்சித்தவருக்கு அளித்துள்ள பதிலால் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் ஜோஃப்ரா ஆர்ச்சர்.

Jofra Archer Shuts Down Twitter Troll With Brilliant Reply

சினிமா, விளையாட்டு என பல துறைகளில் உள்ள பிரபலங்களும் ரசிகர்களுடன் எப்போதுமே தொடர்பில் இருக்க சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். பல பிரபலங்கள் யூ டியூப் சேனல் தொடங்கி தங்களுடைய அன்றாட நிகழ்வுகளை வீடியோவாகவும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதில் ஆர்ச்சர் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, கால்பந்தாட்டம் விளையாடுவது போன்றவை இடம்பெற்றுள்ள தனது முதல் வீடியோ பகிர்ந்துள்ளார்.

அதற்கு கீழே ட்விட்டர் பயனாளர் ஒருவர், “நீங்கள் அழகாக இல்லை” எனப் பதிவிட்டுள்ளார். அதற்கு ஆர்ச்சர், “ஆனால் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்” என பதிலளித்துள்ளார். தன்னை கிண்டல் செய்ய முயற்சித்தவருக்கு ஆர்ச்சர் அளித்துள்ள இந்த பக்குவமான பதிலால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #ENGLAND #JOFRAARCHER