"சேப்பாக்கத்துல கால் வச்சாலே".. சின்ன தல ரெய்னாவின் உருக்கமான போஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவின் சமீபத்திய ட்வீட் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. கடந்த 2011 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை புரிந்திருந்தது. இதில், இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சுரேஷ் ரெய்னா, பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதே போல, ஐபிஎல் போட்டி ஆரம்பமானது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த சுரேஷ் ரெய்னா.
பத்து சீசன்களுக்கு மேலாக அந்த அணிக்காக ஆடி உள்ளார். ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரராக ஜொலித்த சுரேஷ் ரெய்னாவுக்கு Mr. IPL என்ற பெயரும் உண்டு. அந்த அளவுக்கு ஏராளாமான போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள ரெய்னா, கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி இருந்தார். இதனையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்திற்கு முன்பாக, சென்னை அணி ரெய்னாவை அணியில் இருந்து விடுவித்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் வர்ணனை செய்து வருகிறார் ரெய்னா. நேற்று சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டிக்கு வர்ணனை செய்திருந்தார். மேட்ச்க்கு முன்னர் மைதானத்தை பார்வையிட்ட அவர் மற்றொரு முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான ராபின் உத்தப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள பதிவில்,"சேப்பாக்கம் மைதானத்துக்குள் அடியெடுத்து வைப்பது, வீடு திரும்புவது போன்ற உணர்வு. இந்த மைதானம் எனது வெற்றிகளையும், எனது ஏற்ற இறக்கங்களையும், விளையாட்டின் மீதான எனது வாழ்நாள் காதலையும் கண்டுள்ளது. என் இதயம் இருக்கும் இடத்திற்கு திரும்பி வந்தது மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.
Stepping into the Chepauk Stadium feels like coming back home. This ground has witnessed my triumphs, my ups and downs, and my lifelong love for the game. Grateful to be back where my heart belongs 💛 #chennai pic.twitter.com/jCipVDPlcH
— Suresh Raina🇮🇳 (@ImRaina) April 3, 2023