"இது நாட்டு நாட்டு வெர்ஷன் 2.0".. மேட்ச் நடுவுல ஒன்னா நடனமாடிய ஹர்பஜன், சுரேஷ் ரெய்னா.. TRENDING வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Mar 16, 2023 12:23 PM

லெஜன்ட் லீக் கிரிக்கெட் தொடர், தற்போது மத்திய கிழக்கு நாடான கத்தாரில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வேர்ல்டு ஜெயின்ட்ஸ், ஆசியா லயன்ஸ் மற்றும் இந்தியா மகாராஜாஸ் ஆகிய மூன்று அணிகள் இடம்பெற்றுள்ளது. இதில் ஆசியா லைன்ஸ் அணியில் பாகிஸ்தான், ஸ்ரீலங்கா உள்ளிட்ட அணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். வேர்ல்டு ஜெயின்ட்ஸ் அணியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா உள்ளிட்ட அணிகளின் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

Harbhajan singh and suresh raina dance for naatu naatu song

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இந்தியா அந்த மேட்ச்ல தோற்க என் வீடியோ தான் காரணமா?".. கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்.. அஸ்வின் கொடுத்த பதிலடி!!

மேலும் இந்தியா மகாராஜாஸ் அணியை கௌதம் கம்பீர் வழிநடத்தி வருகிறார். இந்த அணியில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், முரளி விஜய், இர்பான் பதான், முகமது கைஃப் உள்ளிட்ட ஏராளமான வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த மூன்று அணியிலும் ஓய்வு பெற்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா மகாராஜாஸ் அணி, ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற போட்டிக்கு நடுவே மைதானத்தில் வைத்து ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி இருந்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Harbhajan singh and suresh raina dance for naatu naatu song

Images are subject to © copyright to their respective owners.

கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியிருந்த திரைப்படம் 'RRR'. இந்த திரைப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் இந்தியாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருந்த சூழலில் பல ஹாலிவுட் ஜாம்பவான்கள் கூட இந்த திரைப்படத்தை பாராட்டி இருந்தனர்.

அப்படி இருக்கையில் RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல், கோல்டன் குளோப் விருதை வென்றிருந்தது. இதனை தொடர்ந்து ஆஸ்கார் விருது பட்டியலிலும் நாட்டு நாட்டு பாடல் நாமினேட் ஆகியிருந்த சூழலில்,  சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருதுகள் விழாவில் சிறந்த பாடலுக்கான விருதையும் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருந்தது.

Harbhajan singh and suresh raina dance for naatu naatu song

Images are subject to © copyright to their respective owners.

அதே போல, நேரடியாக இந்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைப்பதும் இதுதான் முதல் முறை என்ற பெருமையும் பெற்று சாதனை படைத்திருந்தது. இந்த நிலையில்தான், சமீபத்தில் நடந்த லெஜெண்ட் லீக் கிரிக்கெட் போட்டியில், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு மைதானத்திலேயே சில வினாடிகள் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளையும் அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | பிரபல தமிழ் பாட்டுக்கு.. சுனில் கவாஸ்கருடன் சேர்ந்து டான்ஸ் போட்ட தினேஷ் கார்த்திக்.. "இப்டி வித்தியாசமா இருக்கே!!"

Tags : #CRICKET #HARBHAJAN SINGH #SURESH RAINA #DANCE #NAATU NAATU SONG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Harbhajan singh and suresh raina dance for naatu naatu song | Sports News.