" பீனிக்ஸ் பறவை போல".. ரிஷப் பண்டை சந்தித்த சுரேஷ் ரெய்னா.. கூட யாரெல்லாம் இருக்காங்க பாருங்க..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் ரிஷப் பண்டை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

ரிஷப் பண்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
விபத்து
இதனிடையே கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
விபத்திற்கு பிறகு ஒவ்வொரு நாளையும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார் பண்ட். மேலும், தான் நடைப்பயிற்சி செய்யும் வீடியோவையும் அண்மையில் அவர் பதிவிட்டிருந்தார். இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் ரிஷப் பண்டை சந்தித்திருக்கின்றனர்.
பீனிக்ஸ் பறவை
இதுகுறித்து ரெய்னா எழுதியுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,"சகோதரத்துவம் என்றுமே முக்கியமானது. குடும்பத்தில் தான் நம்முடைய மனது மகிழ்ச்சியை காண்கிறது. ரிஷப் பண்ட் விரைவில் மீண்டு வர வாழ்த்துகிறேன். எப்போதும் நாங்கள் உங்களுடன் இருப்போம். நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள். பீனிக்ஸ் பறவை போல எப்போதும் உயர பறக்க வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதனுடன் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துளளர். இந்த பதிவு தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
