மாஸ் என்ட்ரி கொடுத்த பென் ஸ்டோக்ஸ்.. CSK அணி பகிர்ந்த தரமான வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Mar 24, 2023 06:36 PM

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் துவங்க இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பென் ஸ்டோக்ஸ் சென்னை வந்திருக்கிறார். இது தொடர்பாக சிஎஸ்கே அணி பகிர்ந்துள்ள வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

CSK Player Ben Stokes Arrived to Chennai amid IPL 2023

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "உலக கோப்பை தான் முக்கியம்.. குடும்ப நிகழ்ச்சிகள் எல்லாம் அடுத்தது தான்".. ரோஹித்துக்கு கவாஸ்கர் கொடுத்த அட்வைஸ்..

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னையில் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

பயிற்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியுடனான போட்டி முடிவடைந்துள்ளதால் ஜடேஜா CSK அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல, இங்கிலாந்து அணியின் மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் சென்னைக்கு வந்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில், பென் ஸ்டோக்ஸ்-ன் என்ட்ரி வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், காரில் இருந்து இறங்கி ஸ்டோக்ஸ் தனது அறைக்கு செல்கிறார். அப்போது பணியாளர்கள் அவரை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆல் ரவுண்டர்களான ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோரின் பங்களிப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கூடுதலாக பலமாக அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | சிவனும் சக்தியும் சேர்ந்தா.. தீவிர பயிற்சியில் ஜடேஜா - தோனி.. வைரலாகும் வீடியோ..!

Tags : #CRICKET #CSK #CSK PLAYER #BEN STOKES #CHENNAI #IPL 2023

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. CSK Player Ben Stokes Arrived to Chennai amid IPL 2023 | Sports News.